Monday, April 16, 2012

கலாநிதி அகளங்கன்-சிறு குறிப்பு


வவுனியா பம்பைமடுவில் நாகலிங்கம் நல்லம்மா தம்பதிகளின் மகனாக 1953.12.04.ல் பிறந்து,வளர்ந்து பம்பைமடு அ.த.க.பாடசாலை மற்றும் வ/தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆரம்ப,இடைநிலைக் கல்வியை நிறைவேற்றி சுன்னாகம் ஸ்கந்தவரோதய கல்லூரியில் உயர்தரக் கல்வியைப் பெற்றார்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானமாணிப் பட்ட நெறியில் பயின்ற வேளையிலே எழுத்துலகில் தீவிரமாகப் பிரவேசித்து சிரித்திரன் இதழில் தனது மரபு இலக்கியம் சார்ந்த கட்டுரைகளை வரையத் தொடங்கினார்
.

ஒரு சொற்பொழிவாளராக,ஒரு கவிஞராக,சிறுகதை எழுத்தாளராக,மரபு இலக்கிய கட்டுரையாளராக,நாடக எழுத்தாளராக,சஞ்சிகை மலர் ஆசிரியராக பல்வேறு பரிமாணங்களில் தனது கலை இலக்கியப் பணிகளை மேற்கொண்டுவரும் கலாநிதி அகளங்கன் அவர்கள் ஐம்பதுக்கு மேற்பட்ட நூல்களை,மலர்கள்,சஞ்சிகைகளை ஆக்கியுள்ளார்.
தமிழ்அறிஞர் அகளங்கன்அவர்கள்  எழுதிய நூல்கள்
1)   செல்“ ”வா என்று ஆணையிடாய் (அஞ்சலிக் கவிதை) 1977
2)   சேரர் வழியில் வீரர் காவியம் (குறுங்காவியம்) 1982
3)   சமவெளி மலைகள் (அகளங்கன்.சு.முரளிதரன் கவிதைகள்) 1985
4)   வாலி (ஆய்வு நூல்.மூன்று பதிப்புகள்.1987, 1989, 2006) அகில இலங்கை இலக்கியப்              பேரவை, யாழ் இலக்கிய வட்டம் ஆகியவற்றின் சிறந்த இலக்கிய நூலுக்கான பரிசு1987
5)   இலக்கியத் தேறல் (கட்டுரைகள்) 1988
6)   நளவெண்பா (கதை) 1989
7)   அன்றில் பறவைகள் (நாடகங்கள்) தேசிய சாகித்திய மண்டலப் பரிசு 1992
8)   முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தர் (வரலாறு) 1992
9)   இலக்கியச் சிமிழ் (கட்டுரைகள் இருபதிப்புக்கள்) 1992 1993
10)  தென்றலும் தெம்மாங்கும் (கவிதைகள்) 1993
11)  பன்னிரு திருமுறை அறிமுகம் (சமயம்) 1994
12)  மகாகவி பாரதியாரின் சுதந்திரக் கவிதைகள் (ஆய்வு) 1994
13)  இலக்கிய நாடகங்கள். (நாடகங்கள்) வடக்குக் கிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசு, 1994, கொழும்புத் தமிழ்ச் சங்கப் பரிசு 1994
14)  ஆத்தி சூடி  (விளக்கவுரை) 1995
15)  கொன்றை வேந்தன் (விளக்கவுரை) 1996
16)  அகளங்கன் கவிதைகள் (கவிதைகள்) வடக்குக் கிழக்கு மாகாண சாகித்திய  மண்டலப் பரிசு 1996
17)  வாக்குண்டாம் (மூதுரை - விளக்கவுரை) 1997
18)  சிவபுராணம் (பொருளுரை) 1997
19)  செந்தமிழும் நாப்பழக்கம் (பேச்சுக்கள்) 1997
20)  நாமறிந்த நாவலர் (சிறு குறிப்புக்கள்- இரு பதிப்புக்கள்) 1997, 2008.
21)  நல்வழி (பொழிப்புரை -விளக்கவுரை) 1998
22)  இசைப்பாமாலை (இசைப் பாடல்கள்) 1998
23)  கவிஞர் ஜின்னாஹ்வின் இரட்டைக் காப்பியங்கள் ஓர் ஆய்வு(ஆய்வு) 1999
24)  இலக்கியச் சரம் (கட்டுரைகள்) 2000
25)  வெற்றி வேற்கை (நறுந்தொகை - உரை) 2000
26)  கூவாத குயில்கள் (நாடகங்கள்) 2001
27)  திருவெம்பாவை உரை (சமயம்) 2002
28)  பாரதப் போரில் மீறல்கள் (கட்டுரை) 2003
29)  சுட்டிக் குருவிகள் (மழலைப் பாடல்கள்) 2003
30)  சின்னச் சிட்டுக்கள் (சிறுவர் பாடல்கள்) 2005
31)  நறுந் தமிழ் (கட்டுரைகள்) 2006
32)  பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் (ஆய்வு) 2007
33)  பத்தினித் தெய்வம் (நாட்டிய நாடகங்கள்) வடமாகாண சாகித்திய மண்டலப் பரிசு 2008
34)  வேரும் விழுதும் (கட்டுரைகள்) வட மாகாண சாகித்திய மண்டலப் பரிசு 2008
35)  கங்கையின் மைந்தன் (நாடகங்கள்) வட மாகாண சாகித்திய மண்டலப் பரிசு 2009, தமிழ் நாடு கலை இலக்கியப் பெருமன்றப் பரிசு 2009, தமிழியல் விருது 2009, தேசிய சாகித்திய மண்டல சிறப்புச் சான்றிதழ் 2009, (யாழ் இலக்கிய வட்டமும்)அகில இலங்கை இலக்கியப்பேரவை விருது.2009  
36)  பந்து அடிப்போம் (சிறுவர் பாடல்கள்) 2010
37) சிரிக்க விடுங்கள் (சிறுவர் பாடல்கள்) 2010
38)    சகலகலாவல்லிமாலை(உரையுடன் )2011
39)  அலைக்குமிழ்.(நாவல்)2011   
   
   இலங்கை மத்திய அரசின் சாகித்திய விருது,வடக்கு-கிழக்கு மாகாண இலக்கிய ஆளுநர் விருதுகள்,வடக்கு மாகாண நூற்பரிசுகள்,மற்றும் தேசிய ரீதியிலும்,உலகளாவிய மட்டத்திலும் பல்வேறு பரிசில்களையும் பாராட்டுகளையும்,
காவிய மாமணி(1990), தமிழ்மணி(1993), திருநெறிய தமிழ் வேந்தர்(1995), கவி மாமணி(1997) தமிழ் அறிஞர்(1998),பல்கலை எழில்(1998), புராண படன வித்தகர்(1999), புராணபடன புகழ்தகை(1999), சிவனருட்செல்வர்(2001), வாகீச கலாநிதி(2002), செஞ்சொற் செல்வர்(2007), வித்தியா சுரபி(2008), முத்தமிழ்க் கலைச்சுடர்(2010), தமிழியல் வித்தகர்(2010), செந்தமிழ்க் கொண்டல்(2010), முத்தமிழ்ச் சுரபி(2010), கௌரவ கலாநிதி(2011), நாவலர் விருது(2011), கலைப் பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை விருது(2012),மூதறிஞர் கலாநிதி சொக்கலிங்கம்(சொக்கன்)விருது(2012)  போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார்.
இவரது பல கட்டுரைகள்,கவிதைகள்,நாவல்,சிறுகதைகள்,ஈழநாடு,முரசொலி,வீரகேசரி,தினகரன்,தினக்குரல்போன்ற பத்திரிகைகளிலும்,பல சஞ்சிகைகளிலும் வெளிவந்துள்ளன.வெளிவருகின்றன.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன தமிழ்ச் சேவையில் பல சமூக,இலக்கிய நாடகங்கள்,மெல்லிசைப் பாடல்கள்  ஒலிபரப்பாகின.கவியரங்கம்,பேச்சு,பேட்டி,கவிதைக்கலசம்,போன்ற பல நிகழ்வுகளில் இவர் வானொலி,தொலைக்காட்சி ஊடகங்களில் பங்கேற்றிருக்கிறார்.
இவரது வானொலி நாடகங்கள் பல அவுஸ்திரேலியா,கனடா,I.B.C.வானொலிகளில் ஒலிபரப்பாகின.
பட்டி மன்றம்,வழக்காடு மன்றம்,கவியரங்கம்,கலைநிகழ்வுகள் போன்றவற்றுக்கு தலைமை வகித்து வருவதுடன்,சமய தொடர் சொற்பொழிவுகள்,புராண படனம்,போன்றவற்றையும் நிகழ்த்தி வருகிறார்.                                           

No comments:

Post a Comment