Saturday, April 14, 2012

நானும் எனது இலக்கியப் பயணமும்-முதல் நூல்


1977ல் யாழ்.  பல்கலைக்கழகத்தில் தமிழ் மன்றத்தின் தலைவராக நான் இருந்த காலம். தந்தை செல்வநாயகம் அவர்களின் மரண ஊர்வலத்திற்கு எனது தலைமையில் மாணவர் அணி ஊர்வலம் நடந்தது. அஞ்சலிக் கவிதைத் துண்டுப் பிரசுரங்கள் இரண்டை தமிழ் மன்றத்தின் சார்பில் நான் எழுதி வெளியிட்டிருந்தேன்.
ஊர்வலத்தின் போது எனது அஞ்சலிக் கவிதையை என்னோடு சேர்ந்து திரு.சி.சிவலிங்கராஜா அவர்கள் கலைஞர் கருணாநிதியின் பாணியில் வாசித்தார்.
மிக அருமையாக இருந்தது. அதைப் பின்பற்றி பலரும் அதே பாணியில் என் கவிதைத் துண்டுப் பிரசுரங்களை வாசிக்கத் தொடங்கினர்.
அதைக் கேட்ட நான் அவற்றை மூடி வைத்து விட்டு, உடனுக்குடன் புதிதுபுதிதாக அந்தச் சூழ்நிலைக்கேற்ப, காங்கேசன்துறை வீதி பற்றிய வர்ணனைகளோடு கவிதை எழுதிக் கொடுக்க திரு.சி.சிவலிங்கராஜா மிக அருமையாக வாசித்துக் கொண்டு வந்தார். இவர் எனக்கு ஒரு வருடம் இளைய மாணவர்.
திரு.சி.சிவலிங்கராஜா இப்போது கலாநிதி சிவலிங்கராஜா. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் தமிழ்த் துறையின் மூத்த விரிவுரையாளர்.பேராசிரியர்.
பின்பு “செல்” “வா” என்று ஆணையிடாய்”  என்ற பெயரில் அந்த அஞ்சலிக் கவிதைகளை ஒரு சிறு நூலாகவும் வெளியிட்டேன். அதுவே எனது முதலாவது நூல்.                         

No comments:

Post a Comment