1)
1991ல் வடக்குக் கிழக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு தனது முதலாவது சாகித்திய விழாவில் கௌரவித்தது.
2)
5.11.2000 ல் வடக்குக் கிழக்கு மாகாண
கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சு “ஆளுநர் விருது“ வழங்கிக் கௌரவித்தது.
3)
31.1.2003 ல் அகில இலங்கைக் கலைக்
கழகம்,வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம், வவுனியா வளாகம், இந்துமாமன்றம், வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரி ஆகியவற்றுடன் இணைந்து நடாத்திய வன்னிப்
பிரதேசத் தமிழ் இலக்கிய முயற்சிகள் பற்றிய கருத்தரங்கும் கலை நிகழ்ச்சிகளும்
என்னும் நிகழ்வின் போது பொன்னாடை போர்த்திக் கௌரவித்தது.
4)
2007ல் “ஞானம் “சஞ்சிகை ஜூலை 86 வது இதழில் அட்டைப்பட அதிதியாகக் கௌரவித்தது.
5)
வவுனியா மாவட்டச் செயலகம், வவுனியா பிரதேச செயலகம்,
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கம், வவுனியா இந்துமாமன்றம், வவுனியா நகரசபை,
வைரவர் புளியங்குளம் கிராமோதய சபை, வவுனியா பலநோக்குக் கூட்டுறவுச் சங்கம், பிறந்த
ஊரான பம்பைமடு கிராமம், வவுனியாவில் உள்ள பல ஆலயங்கள், பாடசாலைகள் ஆகியன பல
தடவைகள் பொன்னாடை போர்த்தியும் பொற்கிழி வழங்கியும் பாராட்டி கௌரவித்தன.
6)
மூதறிஞர் கலாநிதி க.சொக்கலிங்கம்
அவர்களின் நினைவு விருது (2011ம் ஆண்டுக்கான) தமிழ் அறிஞர் அகளங்கன் அவர்களுக்கு
வழங்கப்பட்டது.
7)
6) வவுனியாவிற்கு வெளியேயும்
அதாவது யாழ்ப்பாணம், மன்னார், கொழும்பு, மலையகம், திருகோணமலை, மட்டக்களப்பு, கிளிநொச்சி,
முல்லைத்தீவு முதலான பல இடங்களிலும், இலக்கியம், சமயம் சார்ந்த பல நிகழ்வுகளின் போது கௌரவங்கள் கிடைக்கப்
பெற்றன.
8)
2003ல் காத்தான் குடிப் பிரதேச
இளைஞர் கழகங்களின் பங்கேற்றலுடன் கிழக்கிலங்கை மனிதவள மேம்பாட்டு நிறுவனமும்
எழுத்தாளர் ஊக்குவிப்பு மையமும் இணைந்து வழங்கும் தமிழ் முஸ்லீம் நல்லுறவு இலக்கிய விழா நிகழ்வின் போது தமிழ்
முஸ்லீம் நல்லுறவுக்காக, இலக்கிய
மூலமான பங்களிப்புச் செய்தமைக்காக கௌரவம்
வழங்கப்பட்டது.
9)
ஜனவரி 6,7,8,9ஆம் திகதிகளில் சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடாத்திய சர்வதேச தமிழ்
எழுத்தாளர் மாநாட்டில் ஆய்வரங்கு இணைத்தலைவர் (சிறுவர் இலக்கியம்) ஆகப் பங்குபற்றிச் சிறப்பித்தமைக்கு பாராட்டுச் சான்றிதழ்
வழங்கப்பட்டது.2011
1) பல வருட காலமாக சமய ஆன்மீக தமிழ்ப்பணிகளை ஆற்றி சைவத் தமிழுக்காய் பணி பல புரிந்து வரும் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் அவர்களுக்கு,மன்னார் மாவட்ட அறநெறிப் பாடசாலைகளின் இணையத்தினால்,மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியில் நடாத்தப் பெற்ற நாவலர் விழாவில் “நாவலர் விருது”வழங்கிக் கௌரவிக்கப்பட்டது{.20.11.2011.}
2) கலைப் பேரரசு ஏ.ரி.பொன்னுத்துரை
நினைவு விருது யாழ்ப்பாணம் நல்லூரில் வழங்கப்பட்டது{.26.2.2012.}
1) பல வருட காலமாக சமய ஆன்மீக தமிழ்ப்பணிகளை ஆற்றி சைவத் தமிழுக்காய் பணி பல புரிந்து வரும் கலாநிதி தமிழ்மணி அகளங்கன் அவர்களுக்கு,மன்னார் மாவட்ட அறநெறிப் பாடசாலைகளின் இணையத்தினால்,மன்னார் சித்தி விநாயகர் இந்துக் கல்லூரியில் நடாத்தப் பெற்ற நாவலர் விழாவில் “நாவலர் விருது”வழங்கிக் கௌரவிக்கப்பட்டது{.20.11.2011.}
No comments:
Post a Comment