Saturday, April 14, 2012

நானும் எனது இலக்கியப் பயணமும்-நாடகங்கள்


யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நான் கல்வி கற்ற போது, (அப்போது வளாகம்1977) முத்தமிழ் விழாவில் எனது கதை வசனத்தில் உருவாகிய “அமரேந்திரா”  நாடகம் மேடையேறியது.
இலங்கை இனப் பிரச்சனையைக் காட்டும் கற்பனை அரச நாடகமாக அது அமைந்தது.கனல் தெறிக்கும் வசனங்களால் பெயர் பெற்ற அந் நாடகம் யாழ். அரியாலை நாடக மன்றத்தால் பின்பு மேடையேற்றப் பட்டது.
திருகோணமலை மூதூர் சேனையூர் நாடக மன்றத்தினராலும் மேடையேற்றப் பட்டது.
“அனிச்ச மலர்” என்ற எனது சமூக சீர் திருத்த நாடகம் வவுனியாவில் நடைபெற்ற நாடகப் போட்டி ஒன்றில் முதலிடம் பெற்றது. இதனை  திரு.செ.பரராசசேகரம் என்பவர் நெறிப் படுத்தித் தயாரித்திருந்தார்.
சில நாடகங்கள் எழுத்துருவிலேயே கிடக்கின்றன. இவற்றில் சில நாடகங்களை மேடை நாடகங்களாகத் தயாரித்தும் இருக்கிறார்கள்.
நு / ஹோல்புறுக் தமிழ் மகாவித்தியாலத்தில் ஆசிரியராக இருந்த காலத்தில், அங்கே பல இலக்கிய நாடகங்களை எழுதி, இயக்கி மேடையேற்றினேன்.திரு.சி.முரளிதரன் அப்போது என்னுடன் ஆசிரியராக இருந்தார்.அவரும் எனக்குத் துணையாக இருந்தார்.
பின்பு வானொலி நாடகங்களின் பக்கம் என் பார்வை திரும்பியது. பல வானொலி நாடகங்களை எழுதினேன். “அன்றில் பறவைகள்” “கூவாத குயில்கள்” “இலக்கிய நாடகங்கள்”  என மூன்று நாடக நூல்களாக அவை வெளிவந்தன.                                             
‘அவுஸ்திரேலிய “முத்தமிழ் முழக்கம்”, “முத்தமிழ் மாலை”  ஆகிய வானொலிச் சேவைகளில், “அன்றில் பறவைகள்”, “இயந்திர இல்லறம்” ஆகிய நாடகங்கள் ஒலிபரப்பப்பட்டன.
சர்வதேச ஒலிபரப்புச் சேவையில்(I.B.C) திரு.தேவராஜா அவர்களால் “அன்றில் பறவைகள்” நாடகம் தயாரிக்கப் பட்டு ஒலிபரப்பாகியது.
கனடா, சுவிஸ், பிரான்ஸ், முதலான நாடுகளிலும் எனது நாடகங்கள் ஒலிபரப்பாகியதுடன், மேடையேற்றப் பட்டுமுள்ளன. கனடா(C.T.R) வானொலியில் எனது “பப்புருவாகனன்” என்ற நாடகம் “தர்மம் வெல்லும்”  என்ற பெயரில் திரு.எஸ்.எஸ்.துரை அவர்களால் தயாரிக்கப் பட்டு பல தடவைகள் ஒலிபரப்பப் பட்டுள்ளது.                           

No comments:

Post a Comment