Saturday, April 14, 2012

நானும் எனது இலக்கியப் பயணமும்-சிரித்திரன் தொடர்பு


சிரித்திரன் ஆசிரியர் திரு.சி.சிவஞானசுந்தரம் அவர்களின் அறிமுகம் திரு.சி.சிவலிங்கராஜா  அவர்கள் மூலம் கிடைத்தது.
அவர் “தமிழ் இலக்கியத்தில்” நகைச்சுவை இருக்கிறதா? இருந்தால் எழுத முடியுமா”எனக் கேட்டார். இருக்கிறது எனச் சொல்லி எழுதத் தொடங்கினேன்.
சிரித்திரனில் 1979ல் “இலக்கியச் சிமிழ்” என்ற தலைப்பில் “அகளங்கன்” என்ற புனை பெயரிலும், “இலக்கியத்தில் நகைச் சுவை” என்ற தலைப்பில் எனது சொந்தப் பெயரான சே.நா,தர்மராஜா என்ற பெயரிலும் பல இலக்கியக் கட்டுரைகளை எழுத ஆரம்பித்தேன். ஐம்பத்தைந்து சிரித்திரன் இதழ்களில் எனது பல ஆக்கங்கள் வெளி வந்துள்ளன.
அவற்றில் சில “இலக்கியச் சிமிழ்” என்ற கட்டுரைத் தொகுப்பாக 1992ல் வெளியிடப் பட்டன. “இலக்கியச் சிமிழ்” இரு பதிப்புக்கள் செய்யப்பட்டது.  

No comments:

Post a Comment