1)
1985ல் அகில இலங்கை ரீதியில்
யாழ்ப்பாணம் ஈழமுரசு பத்திரிகையினால் நடாத்தப்பட்ட சிறுகதைப் பொன்விழாச் சிறுகதைப்
போட்டியில் “மீண்டும் ஒரு குருஷேத்திரம்” என்ற சிறுகதை இரண்டாம் பரிசு பெற்றது.
2)
1991ல் சர்வதேச ஆசிரியர் தினத்தை
முன்னிட்டு, கல்வியமைச்சு ஆசிரியர்களுக்கிடையே அகில இலங்கை ரீதியாக நடாத்திய நாடகப்
பிரதியாக்கப் போட்டியில் “உருகி எரியும் கர்ப்பூரங்கள்” என்ற நாடகப் பிரதி முதலாம் பரிசு பெற்றது.
3)
1994ல் கலாசார அமைச்சு அகில
இலங்கை ரீதியாக நடாத்திய சிறுகதைப் போட்டியில் “யாழ்தேவி” என்ற சிறுகதை இரண்டாம்
பரிசு பெற்றது.
4)
1995ல் மட்டக்களப்பு எழுத்தாளர்
சங்கம் அகில இலங்கை ரீதியில் நடாத்திய அமரர் ரி.பாக்கியநாயகம் நினைவு நகைச்சுவைக்
கட்டுரைப் போட்டியில் “தமிழிலக்கியத்தில் நகைச்சுவை” என்னும் கட்டுரை முதலாம் பரிசு பெற்றது.
5)
1996ல் மாத்தறை மக்கள் சமாதான
இலக்கிய அமைப்பு அகில இலங்கை ரீதியில் நடாத்திய கவிதைப் போட்டியில் “ஒற்றுமைப் பாட்டு” என்ற கவிதை சிறப்புப் பரிசு
பெற்றது.
6)
1996ல் கொழும்புத் தமிழ்ச்சங்கம்
அகில இலங்கை ரீதியாக நடாத்திய பேராசிரியர் க.கைலாசபதி நினைவுக் கட்டுரைப்
போட்டியில் “மகாகவி பாரதியார் காட்டும் வாழ்வியல் முறை” என்ற கட்டுரை முதலாம் பரிசு பெற்றது
.
7)
1996ல் இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனத்தினால் அகில இலங்கை ரீதியில் நடாத்தப்பட்ட நாவற்குழியூர் நடராஜன்
நினைவுக் கவிதைப் போட்டியில் “சமாதானம் துளிர்க்க வேண்டும்” என்ற கவிதை இரண்டாம் பரிசு பெற்றது.
8)
1996ல் சர்வதேச ஆசிரியர்
தினத்தையொட்டி கல்வியமைச்சு அகில இலங்கை ரீதியில் அசிரியர்களுக்கிடையே நடாத்திய
சிறுகதைப்போட்டியில் “துருவ நட்சத்திரம்” என்னும் சிறுகதை திறமைச் சான்றிதழ் பெற்றது.
9)
1997ல் மேற்கூறப்பட்ட போட்டியில் ”மனித தெய்வங்கள்“ என்ற சிறுகதை பாராட்டுச்
சான்றிதழைப் பெற்றது.
10)
கலாசார அலுவல்கள் தேசிய மரபுரிமை அமைச்சு நடாத்திய
தேசிய மட்டத்திலான அரச சேவையாளர்களுக்கான நிருமாண போட்டித் தொடரில்,
1.
2004ல் சிறுகதை.தலைப்பு ”நாளைக்கும் பூ மலரும்.”
2.
2005ல் கவிதை “யாம் நினைக்கில் சமாதானப் பூக்கள் பூக்கும்.”
3.
2006ல் பாடலாக்கம் “சிரிக்க விடுங்கள்.”
ஆகிய ஆக்கங்கள் மிகச்சிறந்ததெனத் தெரிவு செய்யப்பட்ட பத்து ஆக்கங்களில் இடம்
பிடித்துச் சான்றிதழ் பெற்றன.
11)
2009ல் வடமாகாண உள்ளுராட்சிச்
சபைகளுக்கிடையிலான கவிதைப் போட்டியில் இவரது கவிதை முதலாம் பரிசைப் பெற்றது.
No comments:
Post a Comment