Sunday, April 15, 2012

கலாநிதி தமிழ்மணி அகளங்கன் அவர்கள்


பிறந்த இடம் ;  ஈழ  வள  நாட்டின் இதயப் பகுதியாக விளங்கும் ,வட மாகாணத்தின் தலை வாசலாகத் திகழும் ,வவுனியா நகரின் ,மேற்கே மன்னார் வீதியில் எட்டுக் கிலோ மீற்றர் தூரம் சென்று,பின் வடக்கே காட்டுப் பாதையூடாக மூன்று கிலோ மீற்றர் தூரத்தில் வட மேற்குத் திசையில்  இருக்கும் பம்பைமடு என்னும் அழகிய சிறிய விவசாயக் கிராமம்.
பெற்றோர் ;தந்தையார் சேனாதிராஜா நாகலிங்கம்.தாயார் நல்லம்மா.தந்தையார் வில்லி பாரதம்,கம்பராமாயணம்,முதலான இதிகாசங்களிலும் ஏனைய இலக்கியங்களிலும் அதிக ஈடுபாடு கொண்டவர்.பல பாடல்களை மனனம் செய்து வைத்திருந்தவர். ஆலயங்களில் கந்தபுராணம், திருவாதவூரடிகள் புராணம், பிள்ளையார் புராணம் முதலான புராணங்களுக்கு புராண படனம்(விரிவுரை ) செய்பவர். சோதிடத்திலும்,வீடு,கிணறு முதலானவற்றுக்கு நிலையம் எடுப்பதிலும் வல்லவர். சமூக சேவகர். பிரதேச மட்டத்தில் சமூக சேவைக்கெனப் பல பதவிகளை வகித்தவர்.
சகோதரர்கள் ; ஐந்து மூத்த ஆண் சகோதரர்களையும் ஒரு மூத்த சகோதரி,ஒரு இளைய சகோதரி என எட்டுப் பேர் கொண்ட குடும்பத்தில் ஏழாவது பிள்ளை.

பிறந்த திகதி ;1953.12.04.
பெயர் ;நா .தர்மராஜா.
மனைவி ; வவுனியா நகரின் கிழக்குத் திசையில் கொறவப் பொத்தான வீதியில் மூன்று கிலோ மீற்றர் தூரம் சென்று, பின் வடக்கே ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில்வட கிழக்குத் திசையில் உள்ள கள்ளிக்குளம் எனும் கிராமத்தில் பிறந்தவர். பெயர் பூரணேஸ்வரி.பொருளியல் சிறப்புப் பட்டதாரி. B.A.(Hons-Economics) மனைவியின் ஆலோசனையும் ஒத்துழைப்பும் எழுத்துலகில் இவ்வளவு தூரம் பணியாற்ற உறுதுணையாக இருக்கிறது.
பிள்ளைகள் ; இரண்டு பேர்.  மூத்தவர் அநபாயன்.  பொறியியல்  துறையில் கலாநிதிப்பட்டம்  பெற்றவர். தற்போது டாக்டர்  நித்தியா M.B.B.S வைத் திருமணம் செய்து  அவுஸ்திரேலியாவில்  வாழ்கிறார்.  அடுத்தவர்  மகள்  அநிந்திதை.  தமிழ் சிறப்புப் பட்டதாரி .B.A(HONS-TAMIL).  தற்போது  சட்டத்தரணி (வழக்கறிஞர்) கேசவராஜன் L.L.B.ATTORNEY. AT .LAW COMMISSIONER FOR OATHS என்பவரைத்  திருமணம் செய்து திருகோணமலையில் வாழ்கிறார்.
கல்வி ;  ஆரம்பக்கல்வி  பம்பைமடு அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை.இடை நிலைக் கல்வி வவுனியா தமிழ் மகா வித்தியாலயம்.( .6-தொடக்கம் க .பொ .சாதாரண தரம் வரை)உயர் கல்வி க .பொ .த உயர் தரம் யாழ்ப்பாணத்து சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரி கணித விஞ்ஞானத் துறை.பல்கலைக்கழகக் கல்வி ,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணித புள்ளிவிபரவியல் துறையில் பட்டப் படிப்பு.
தொழில் ;இருபத்தைந்து  ஆண்டுகளுக்கு மேல்  கணித ஆசிரியராகக் கடமையாற்றியுள்ளார்.  வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் கடமையாற்றிய போது  30.09.2009 ல் ஒய்வு பெற்றார்.
கலை இலக்கிய ஈடுபாடு ;பாடசாலைக் காலத்திலேயே  கவிதை எழுதத் தொடங்கினார்  வில்லுப்பாட்டு எழுதி நண்பர்களோடு மேடை ஏற்றினார்.கவியரங்குகளில் பங்கு கொண்டார்.பேச்சுத் துறையில் ஈடுபாடு கொண்டார்.
தொலைபேசி இலக்கம் 0242221676……0779606893.
E .MAIL  ADDRESS    akalankan04@gmail.com
முகவரி ;இல .90 திருநாவற்குளம் வவுனியா.

        

No comments:

Post a Comment