1)
2002ல் மாகாண மட்டத்
தமிழ்த்திறன் போட்டியில் 5ம் பிரிவுக்கான கவிதை நயம் போட்டிக்கு இவரது “அகளங்கன் கவிதைகள்” என்ற நூலில் உள்ள “சிந்தனை செய் தமிழா” என்றதலைப்பிலான கவிதைகளில், “வேலிக்குச் சண்டையிட்டு...”. எனத் தொடங்கும் கவிதை சேர்த்துக்கொள்ளப்பட்டது.
2)
2006ல் தமிழ்த்திறன் போட்டியில்
இசை தனி, பிரிவு 4- ( தரம்10,11) க்கு அகளங்கன் கவிதைகள் நூலிலுள்ள “மனித நேயம் செழிக்க வேண்டும்” என்ற தலைப்பிலான கவிதைகளில், “தனித்துவங்கள் பேணுமொரு சமத்துவத்தில் சேர்ந்து” எனத் தொடங்கும் கவிதை சேர்த்துக் கொள்ளப்பட்டது.
3)
இலங்கைத் தேசிய நூல் அபிவிருத்திச் சபை “சுட்டிக் குருவிகள்” என்ற மழலைப் பாடல்கள்
நூலைத் தேர்ந்தெடுத்து (2003)ல் 20,000ரூபா பெறுமதியான பிரதிகளைக் கொள்வனவு செய்தது.
4)
இலங்கைத் தேசிய நூல் அபிவிருத்திச் சபை “சின்னச் சிட்டுக்கள்” என்ற சிறுவர் பாடல்கள்
நூலைத் தேர்ந்தெடுத்து (2005)ல் 40,000ரூபா பெறுமதியான பிரதிகளைக் கொள்வனவு செய்தது.
5)
கலாசார அலுவல்கள் அமைச்சும் மத்திய கலாசார
நிதியமும் “பாரதியாரும் பாஞ்சாலி சபதமும்” என்ற இவரது ஆய்வு நூலைத் தேர்வு செய்து. (2007)ல் 50,000ரூபா பெறுமதியான பிரதிகளைக் கொள்வனவு செய்தது.
இலங்கை நூலக ஆவண ஆக்கல்
சேவைகள் சபை இவரது “வேரும் விழுதும்“ என்ற நூலைத் தேர்வு
செய்து (2008ல்) 50,000ரூபா பெறுமதியான பிரதிகளைக் கொள்வனவு செய்தது
No comments:
Post a Comment