இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபன தமிழ்ச்
சேவையில் இவரது பல நாடகங்களும் மெல்லிசைப் பாடல்களும் ஒலி
பரப்பாகின.இதில்,இந்தியத் தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் ராமமூர்த்தி
(விஸ்வநாதன்) யினால் இசையமைக்கப்பட்ட ”சேற்று வயல் காட்டினிலே நாற்று நட வந்த பெண்ணே” என்ற கிராமிய மெட்டுக் கொண்ட பாடல் மிகவும்
பிரபலம் பெற்றது.
சிங்களத் திரையிசைப் பாடகியான சுஜாத்தா அத்த
நாயக்காவும் ஒரு பாடலைப் பாடியுள்ளார்.பத்து பாடல்களுக்குமேல் ஒலிபரப்பாகின.
அத்தோடு பல உரைகளையும் ஆற்றியிருக்கிறார்.பல
கவியரங்குகளில் பங்குகொண்டும்,தலைமை வகித்தும் சிறப்பித்துள்ளார்.கவிதைக் கலசம்
என்ற நிகழ்ச்சியை 1998ம் ஆண்டில் 38 வாரங்களும், 2001ல் ஆண்டு முழுவதும் நடாத்தியுள்ளார். வெள்ளிக்கிழமை தோறும் இரவு 9.30 மணிக்கு இந்நிகழ்ச்சி இடம் பெற்றது.
இவரது சமூக நாடகங்களும்,இலக்கிய நாடகங்களும்
வானொலியில் ஒலிபரப்பாகின.பின் அவை நூலுருப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை ரூபவாகினியில் பல கவியரங்குகளில் பங்கு
கொண்டும்,தலைமை வகித்தும் உள்ளதோடு பலபேட்டிகளையும் வழங்கியுள்ளார்.
மேலும் அவுஸ்திரேலிய “முத்தமிழ் முழக்கம்” “முத்தமிழ் மாலை” ஆகிய வானொலிச் சேவைகளிலும், சர்வதேச ஒலிபரப்புச்
சேவை (I.B.C) யிலும்,கனடா (C.T.R) வானொலியிலும் மற்றும் பல இடங்களிலும் இவரது நாடகங்கள்
ஒலிபரப்பப்பட்டுள்ளன.கனடா தமிழ் வானொலி நிலையம் (C.T.R) சிறந்த நாடக எழுத்தாளருக்கான கௌரவ விருதினை
வழங்கிக் கௌரவித்தது.
இவரது “பப்புருவாகனன்” என்ற இலக்கிய நாடகத்தை “தர்மம் வெல்லும்” என்ற பெயரில் வானொலி நாடகமாகத் தயாரித்து கனடா தமிழ்
வானொலியில் (C.T.R) பல தடவைகள்
ஒலிபரப்பி,சிறந்த நாடகத்துக்கான விருதை திரு. s.s.துரை அவர்கள் வீட்டுக்கு கொண்டு வந்து தந்தார்.(2004)
No comments:
Post a Comment