சேற்று வயற் காட்டினிலே” எனும் பாடல் இந்திய பிரபல திரைப் பட இசை அமைப்பாளர் திரு.T.K.ராமமூர்த்தி (மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் ராமமூர்த்தி இரட்டையரில் ஒருவர்) அவர்களால் 1979 ல் இசை அமைக்கப்பட்டு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில் பாடப்பட்டு வந்தது .”சலசலக்கும் ஓசையிலே” ,”காற்று வந்தால் நாணமென்ன” ,”பொன்மாலை நேரம்” ,”காலைப் பனிக்குளித்து” ,”தாமரை மலர் செய்த தவமோ” ,”மல்லிகைத் தோட்டத்திலே” “,குன்றாத இளமையுடன் குமரன்” முதலான இவரது மெல்லிசைப் பாடல்கள் 1984 காலப் பகுதியில் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில் பாடப்பட்டு வந்தன.
மேலும் அவுஸ்திரேலிய “முத்தமிழ் முழக்கம்” “முத்தமிழ் மாலை” ஆகிய வானொலிச் சேவைகளிலும், சர்வதேச ஒலிபரப்புச்
சேவை (I.B.C) யிலும்,கனடா (C.T.R) வானொலியிலும் மற்றும் பல இடங்களிலும் இவரது
நாடகங்கள் ஒலிபரப்பப்பட்டுள்ளன.கனடா தமிழ் வானொலி நிலையம் (C.T.R) சிறந்த நாடக எழுத்தாளருக்கான கௌரவ விருதினை
வழங்கிக் கௌரவித்தது.
இவரது “பப்புருவாகனன்” என்ற இலக்கிய நாடகத்தை “தர்மம் வெல்லும்” என்ற பெயரில் வானொலி நாடகமாகத் தயாரித்து கனடா
தமிழ் வானொலியில் (C.T.R) பல தடவைகள் ஒலிபரப்பி,சிறந்த நாடகத்துக்கான
விருதை திரு. s.s.துரை அவர்கள் வீட்டுக்குக் கொண்டு வந்து தந்தார்.
டென்மார்க் ஸ்ரீ அபிராமி அம்மன் ஆலயத்தினர் நடாத்துகின்ற “லண்டன் வானொலி –ஆன்மீக
மாலை” நிகழ்வில் (மாதாஜி அபிராமி உபாசகி அம்மா) –ஆன்மீகம் சம்பந்தமான
பேச்சு 06.04.2011 தொடக்கம் இலங்கை நேரம் 9.30 க்கு தொலைபேசி ஊடாக நேரடி பேச்சு ஒவ்வொரு புதன்கிழமையும்
தொடர்ந்து எட்டுக் கிழமைகள் இடம்பெற்றன. பின் (20.07.2011) திகதி இடம் பெற்றது.
இலங்கை ரூபவாகினிக் கூட்டுத்தாபனம் 1993ம் ஆண்டு புதுவருட விவரணத்தை “வந்தது வசந்தம்”
என்ற பெயரில் தயாரித்த போது குடும்பமாக நடித்தோம்.
இலங்கை தொலைக்காட்சி ரூபவாகினிக் கூட்டுத் தாபனத்தில் “பொங்குக புதிய ஒளி போயொழிக போர்
இருட்டு” எனும் தலைப்பில் தீபாவளி கவியரங்கில் கவிதை வாசித்தார்.(19.10.1995)
இலங்கை தொலைக்காட்சி ரூபவாகினிக் கூட்டுத் தாபனத்தில் சித்திரை மாத ஊர் கோல நிகழ்வில்
இவரது பேட்டி இடம்பெற்றது.(1995)
இலங்கை தொலைக்காட்சி ரூபவாகினிக் கூட்டுத் தாபனத்தில் “சிரிக்கின்றாள் சித்திரையாள்”
எனும் தலைப்பில் சித்திரைப் புத்தாண்டு கவியரங்கில் கவிதை வாசித்தார்.(14.04.1997)
இலங்கை தொலைக்காட்சி ரூபவாகினிக் கூட்டுத் தாபனத்தில் மேலும் சில பேட்டிகளை
வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
(தொடரும்…..)
01.09.2011. தொகுப்பு
..
திருமதி பூரணேஸ்வரி அகளங்கன் B.A(Hons
No comments:
Post a Comment