Sunday, April 15, 2012

கலாநிதி அகளங்கன்


சிரித்திரன் ஆசிரியர் திரு. சிவஞானசுந்தரம் அவர்களின் அறிமுகம் திரு.சிவலிங்கராஜா அவர்கள் மூலம் கிடைத்தது. 1979 தொடக்கம் இலக்கியச் சிமிழ், இலக்கியத்தில் நகைச்சுவை போன்ற பல கட்டுரைகளை 55 சிரித்திரன் இதழ்களில் தொடர்ந்து எழுதினார். அவற்றில் சில இலக்கியச் சிமிழ் என்ற கட்டுரைத் தொகுப்பாக 1992 ல் வெளிவந்தது.
மேலும் மலர்க் குழு ஆசிரியராக இருந்து பல மலர்கள், சஞ்சிகைகளை தயாரித்துள்ளார்.குறிப்பாக, பண்டாரவன்னியன் விழாமலர்,  தவத்திரு ஆறுமுகநாவலர் சைவ வினாவிடை தொகுப்பு,  சுத்தானந்தம், கந்தசுவாமி கோவில் மகாகும்பாபிஷேக மலர்,  பலநோக்குக் கூட்டுறவுச் சங்க தசாப்த சிறப்பு மலர்,  சுத்தானந்தம் பொன்விழா மலர்,  கதிராளி,  மருதநிலா, கலைமருதம்,  மருததீபம்,  காளி தரிசனம்,சிந்தாமணி  போன்றவற்றை குறிப்பிடலாம்.
மேலும் பட்டி மன்றங்கள், வழக்காடு மன்றங்கள் ஆகியவற்றில் பங்கு கொண்டும் தலைமை வகித்தும் உள்ளார்.                         

No comments:

Post a Comment