1)
அகளங்கனின் இலக்கியச் சிமிழ் நூல் வெளியிடப்பட்ட
பின்னர் வவுனியா வீரகேசரி நிருபரால்,”அகளங்கனின்
ஆற்றல் இறைவன் அளித்த கொடை” எனும் கட்டுரை வீரகேசரிப்
பத்திரிகையில் எழுதப்பட்டது.12.02.1993)
2)
செந்தமிழும் நாப்பழக்கம் நூல் விமர்சனம் வானவில் வாராந்த சஞ்சிகையில் வெளி வந்தது.(24.1.1998)
3)
“ இலக்கிய நுகர்ச்சியை மீள வலியுறுத்தும் சுவையான நூல் இலக்கியச்சரம் ” எனும் குறிப்பை கே.எஸ்
.சிவகுமாரன் அவர்கள் வீரகேசரி இலக்கிய உலகு பகுதியில் எழுதியுள்ளார்.(31.07.2000)
4)
“வாசகர் மனதில் காட்சிகளை
விரித்துக் கொடுக்கும் நடை”எனும் தலைப்பில் அகளங்கனின் “இலக்கியச்சரம்”நூல்
வெளியீட்டு விழா சார்பாக கந்தையா ஸ்ரீ கணேசன் அவர்களின் விமர்சனம் தினக்குரல்
பத்திரிகையில் வெளிவந்தது.(31.12.2000)
5)
“ பாரதப் போரில் மீறல்கள் ” எனும் குறிப்பையும் கே
.எஸ் .சிவகுமாரன் அவர்கள் வீரகேசரி நூற் பயன் பகுதியில் எழுதியுள்ளார்.(03.06.2005)
6)
அகளங்கனது
சின்னச்சிட்டுக்கள் நூல் அறிமுகம் விஜய் பத்திரிகை
பொதிகை பகுதியில் வெளிவந்தது.(15.02.2006)
7)
“ எழுத்தாளர் சமூகத்தின் ஓர் அங்கம் ” எனும் அகளங்கனின் பேட்டி
தினக்குரல் பத்திரிகையில் வெளிவந்தது.நேர் கண்டவர் கனகரவி.(12.08.2007)
8)
“ பொங்கி விழும் செந்தமிழ்த்தேன் பேச்சு ! பங்கமற்ற சங்கக்கவி மூச்சு ! கவிஞர் அகளங்கன் ” எனும் குறிப்பு ஈழநிலா
அவர்களால் சுடரொளிப் பத்திரிகையில் எழுதப்பட்டது.(14.10….20.10.2007)
9)
“ காவிய கதா நாட்டிய நாடக விழா ” எனும் குறிப்பு யாழவள்
பத்மநாதனால் வீரகேசரிப் பத்திரிகையில் எழுதப்பட்டது.(17.02.2008)
10)
“ பல துறைகளிலும் தடம் பதித்த அகளங்கன் ” எனும் குறிப்பு புன்னியாமீன்
அவர்களால் வீரகேசரிப் பத்திரிகையில் இவர்கள் நம்மவர்கள் பகுதியில்
எழுதப்பட்டது.(16.03.2008)
11)
“ நறுந்தமிழ் நூல் அறிமுகம் ” கே .எஸ் .சிவகுமாரன்
அவர்களால் வீரகேசரிப் பத்திரிகையில் எழுதப்பட்டது.(07.06.2008)
12)
“ பாரதியாரும் பாஞ்சாலி சபதமும் நூல் பற்றிய இரசனைக்
குறிப்பு ”
மா. .பாலசிங்கம் அவர்களால் வீரகேசரியில் எழுதப்பட்டது.(06.09.2008)
13)
“அகளங்கனின் பத்தினித்
தெய்வம் நாட்டிய நாடகங்கள் ” எனும் குறிப்பு
மு. .கெளரிகாந்தன் அவர்களால் வீரகேசரியில் எழுதப்பட்டது.(25.10.2008)
14)
“ விருதுகள் திறமைக்கே தவிர தனி நபர்களுக்கல்ல.இரட்டை விருது பெற்ற படைப்பாளி அகளங்கன் ” நேர்காணல் உதயன்
பத்திரிகையில் வெளிவந்தது.நேர் கண்டவர் ஔண்யன்.( 22.11.2009)
15)
“வள்ளுவன் குரலே வழி காட்ட
வேண்டும் .அகளங்கனுடனான தமது நட்பைப் பகிர்கிறார்
ஜின்னாஹ் “தினகரன் பத்திரிகை வார மஞ்சரியில் வெளிவந்தது.(14.02.2010)
No comments:
Post a Comment