Saturday, April 14, 2012

நானும் எனது இலக்கியப் பயணமும்-வாலி-ஆய்வு


பேராசிரியர் கா.சிவத்தம்பி அவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் தனது மாணவர்களுக்கு இராமாயணம் பற்றிக் கற்பிக்கும் போது, வாலிவதை ஒரு சுவாரஸ்யமான, தீர்வு காணமுடியாத பிரச்சனை எனக் கற்பித்ததைக் கேள்விப் பட்டு, வாலி வதை சம்பந்தமாக ஆராய்ந்து வாலி – “கொலைச் சரமும் கேள்விச் சரமும்” என்ற பெயரில் ஒரு தொடர் கட்டுரையை ஆய்வுக் கட்டுரையாக ஈழநாடு பத்திரிகையில் எழுதினேன்.
1979ல் ஈழநாடு வார மலரில் எட்டு வாரங்கள் தொடர்ச்சியாக வெளிவந்த அந்தக்  கட்டுரை என்னைப் பெரிதும் பிரபலப் படுத்தியது. பின்னர் 1987ல் பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களின் உதவியுடனும், அணிந்துரையுடனும் “வாலி” என்ற பெயரில் நூல் வடிவம் பெற்றது.
அகில இலங்கைக் கம்பன் கழகம் இதனை வெளியிட்டது. இதற்கு யாழ். இலக்கிய வட்டமும் அகில இலங்கை இலக்கியப் பேரவையும் சிறந்த நூலுக்கான சான்றிதழ் வழங்கின. “வாலி” பின்பு ஈழத்து சிவானந்தன் (புலவர் சிவானந்தன்) அவர்களின் முயற்சியால் ஸ்ரீ லங்கா அச்சகத்தாரால் மறு பதிப்பும் செய்யப் பட்டது. எழுத்தாளர் ஊக்குவிப்பு மையத்தினால் (ஓ.கே.குணநாதன் மூலம்) மூன்றாம் பதிப்பும் வெளியிடப் பட்டது.

No comments:

Post a Comment