Saturday, April 14, 2012

நானும் எனது இலக்கியப் பயணமும்-எழுத்து முயற்சி


யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கணித புள்ளி விபரத் துறையில் பட்டப் படிப்பு படிக்கும் வாய்ப்புக் கிட்டியது. அக்காலத்தில் சதாவதானி கதிரைவேற்பிள்ளையின் நினைவாக இயங்கும் தம்பசிட்டி சதாவதானி கதிரைவேற்பிள்ளை சன சமூக நிலைய நூலகத்தின் கதிரொளி என்ற கை எழுத்துச் சஞ்சிகையில் எழுதினேன்.அவர்களின் விழாவிலும் பேசியிருக்கிறேன்.
பல்கலைக்கழக மலர்கள் பலவற்றில் கவிதைகள், சிறுகதை, இலக்கியக் கட்டுரைகள்  எழுதினேன்.
பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காலத்தில் பல கவியரங்குகளில் பங்கு பற்றினேன். அங்கிருந்து வவுனியாவிற்கு வந்தும் கவியரங்குகளில் கலந்து கொண்டேன். பல பட்டி மண்டபங்களில் பேசியிருக்கிறேன்.
இன்று மிகவும் பிரபலமாக விளங்கும் கம்பவாரிதி இ.ஜெயராஜ் அப்போது கம்பன் கழகத்தைப் புதுப்பிப்பதற்கு முன்பே பேச்சுத் துறையில் ஆர்வம் கொண்டவராக இருந்தார்.
அவர் யாழ். இந்துக்கல்லூரியில் க.பொ.த. உயர்தர (கணிதத் துறை) மாணவனாக இருந்த காலம். ஒரு தடவை சண்டிலிப்பாயில் நடை பெற்ற பட்டிமண்டபம் ஒன்றிற்கு என்னையும் அழைத்துச் சென்றார்

No comments:

Post a Comment