பல சிறுகதைகளை எழுதியிருக்கிறேன். பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் சில
சிறுகதைகள் வெளிவந்திருக்கின்றன.
“மீண்டும் ஒரு
குருஷேத்திரம்”, “மனித தெய்வங்கள்”, “துருவ நட்சத்திரம்”, “யாழ் தேவி”, “மண்ணின்
மைந்தர்கள்”, போன்ற சிறுகதைகளுக்கு பரிசும், பாராட்டும் கிடைத்துள்ளன. பல
சிறுகதைகள் நூலுருப் பெறாமல் இருக்கின்றன.
மேலும் பல பட்டங்களையும்,
பரிசுகளையும் பெற்றதுடன் பல நூல்களையும் வெளியிட்டுள்ளேன். பல மலர்களையும்
தயாரித்துள்ளேன்..
வவுனியா கலை இலக்கிய
நண்பர்கள் வட்டத்தின் ஆரம்ப கால அமைப்பாளர்களில் ஒருவனாக இருந்ததுடன், தற்போது
அதன் தலைவராக இருந்து கொண்டு பல சமூக, இலக்கிய பணிகளை ஆற்றி வருகிறேன்.
பல இளைய தலைமுறையினரை
இலக்கியப் பணியில் ஈடுபடுத்தும் முயற்சியில் இவ் வட்டம் வளர்ச்சி கண்டிருக்கிறது.
அரை ஆண்டுச் சஞ்சிகையாக “மாருதம்” வெளியிடப் பட்டு வருகிறது. இவ் வட்டத்தின் மூலம்
பல நூல்கள் வெளியிடப் பட்டுள்ளன.
திரு.ந.இரவீந்திரன், திரு.கந்தையா
ஸ்ரீகணேசன், திரு.கனகரவி, திரு.ஐ.கதிர்காம சேகரன் , திரு.ந.பார்த்திபன் முதலான
பலர் இவ் அமைப்பில் என்னோடு ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பல மன்றங்களில்
தலைவராக,உறுப்பினராக போசகராக, காப்பாளராக இருந்து கொண்டு, பல விழாக்களை
நடாத்தியும்,போட்டிகள் வைத்தும் இலக்கிய,சமூக, சமய பணிகளை ஆற்றி வருகிறேன்.
No comments:
Post a Comment