யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் இவர் கல்வி கற்ற
போது (அப்போது வளாகம் 1977) முத்தமிழ் விழாவில் இவரது கதை வசனத்தில்
உருவாகிய “அமரேந்திரா” நாடகம் மேடையேறியது.கனல் தெறிக்கும் வசனங்களால் பெயர் பெற்ற
இந்நாடகம் யாழ்.அரியாலை நாடக மன்றத்தாலும் மேடையேறப்பட்டது. திருகோணமலை மூதூர்
சேனையூர் நாடக மன்றத்தினராலும் மேடையேறப்பட்டது.
“அனிச்சமலர்” என்ற இவரது சமூக சீர்திருத்த நாடகம்
வவுனியாவில் நடைபெற்ற நாடகப் போட்டி ஒன்றில் முதலிடம் பெற்றது.
நு / ஹோல்புறுக் தமிழ் மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக
இருந்த காலத்தில்(1985) பல இலக்கிய நாடகங்களை எழுதி, இயக்கி மேடையேற்றியுள்ளார். திரு.சு.முரளிதரன்
ஆசிரியர் அவர்கள் இவருக்குத் துணையாக இருந்தார்.
பல வானொலி நாடகங்களை எழுதியுளார். ”அன்றில் பறவைகள்” ,”கூவாத குயில்கள்”, “இலக்கிய நாடகங்கள்,” “கங்கையின் மைந்தன் “ என நான்கு நாடக நூல்களாக அவை வெளி வந்ததன.
“யாழ்தேவி” என்ற தொலைக்காட்சி நாடகப் பிரதி ரூபவாகினி
சிரேஸ்ட நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திரு.அருணா செல்லத்துரையின் நெறியாள்கையில், வவுனியா நகரசபையினால் சின்னத்திரை (தொலைக்காட்சி) நாடகமாகத் தயாரிக்கப்பட்டது(.19.94)
இது வவுனியாவில் வெளிவந்த முதல் குறும்படம்
என்பதும் குறிப்பிடத்தக்கது.(1994)
அவுஸ்திரேலிய “முத்தமிழ் முழக்கம்” “முத்தமிழ் மாலை” ஆகிய வானொலிச் சேவைகளில், ”அன்றில் பறவைகள்” ,”இயந்திர இல்லறம்” ஆகிய நாடகங்கள் ஒலி பரப்பப்பட்டன..சர்வதேச ஒலி பரப்புச்
சேவையில்(I.B.C.) திரு.தேவராஜா அவர்களால்“அன்றில் பறவைகள்” நாடகம் தயாரிக்கப்பட்டு ஒலிபரப்பாகியது.கனடா, சுவிஸ், பிரான்ஸ் முதலான நாடுகளிலும் ஒலிபரப்பாகியதுடன்
மேடையேறப்பட்டுமுள்ளன.கனடா (C.T.R.) வானொலியில் இவரது “பப்புருவாகனன்” என்ற நாடகம் “தர்மம் வெல்லும்” என்ற பெயரில் திரு.எஸ்.எஸ்துரை அவர்களால்
தயாரிக்கப்பட்டு பல தடவைகள் ஒலிபரப்பப்பட்டுள்ளது(.2004)
இவை குடும்பம்,சமூகம்,
இலக்கியம்,வரலாறு,சார்ந்தவை. நாடகம் என்பதினை நாடு –அகம் எனப்பிரித்து
நாட்டிலுள்ளவர்களைத் தன்பால் ஈர்த்து அவர்கள் வாழ்வை மேம்படுத்துவது என்று பொருள்
கொள்வர்.இவருடைய நாடகங்களுக்கு இந்த ஆற்றல் உண்டு.
“அன்றில் பறவைகள்” என்ற இவரது வானொலி நாடக நூல் 1992ம் ஆண்டுக்கான
தேசிய சாகித்திய விருதினைப் பெற்றது. இந்த விருது பெற்ற முதல் வானொலி நாடக நூல் இது என்பது குறிப்பிடத்தக்கது
.
இவரது “இலக்கிய நாடகங்கள்” நூல்1994 ம் ஆண்டுக்கான வடக்கு-கிழக்கு மாகாண சாகித்திய
மண்டலப் பரிசையும், கொழும்புத் தமிழ்ச் சங்கப் பரிசையும் பெற்றது.
. ”கங்கையின் மைந்தன்” நாடக நூல் 2009க்கான
வட மாகாண சாகித்திய மண்டலப் பரிசையும், தமிழ்நாடு கலை இலக்கியப் பெரு மன்றத்தின்
பரிசையும், தமிழியல் விருதையும், தேசிய சாகித்திய மண்டல சிறப்புச் சான்றிதழையும்,
(யாழ் இலக்கிய வட்டமும்) அகில இலங்கை இலக்கியப்பேரவை விருதையும் பெற்றது .
“பத்தினித் தெய்வம்” என்னும் நாட்டிய நாடக நூல்2008 ம் ஆண்டுக்கான வட மாகாண சாகித்திய மண்டலப்
பரிசைப் பெற்றது.
1991ல் சர்வதேச ஆசிரியர் தினத்தை
முன்னிட்டு,கல்வியமைச்சு ஆசிரியர்களுக்கிடையே
அகில இலங்கை ரீதியாக நடாத்திய நாடகப்பிரதியாக்கப் போட்டியில் “உருகி
எரியும் கர்ப்பூரங்கள்”என்ற நாடகப்பிரதி முதலாம் பரிசு பெற்றது,
1998ல் பிரான்ஸ் தமிழ் ஒலி நிறுவனம் தினக்குரல்
பத்திரிகையுடன் இணைந்து நடாத்திய சில்லையூர் செல்வராசன் ஞாபகார்த்த வானொலி நாடகப்
போட்டியில் “சிலம்பு பிறந்தது” என்ற நாடகம் இரண்டாம் பரிசு பெற்றது.
இவரது “உருகி எரியும் கர்ப்பூரங்கள்” என்ற நாடகம் திரு.சு.பூபாலசிங்கம் அவர்களால்
ஆங்கிலத்தில் ”MELTING CAMPHORS” என்ற பெயரில் மொழிபெயர்க்கப்பட்டு, மேடையேற்றப் பட்டதோடு நூலாகவும்
வெளியிடப்பட்டது.இவரது “செஞ்சோற்றுக் கடன்” என்ற நாடகம் திரு.சு.பூபாலசிங்கம் அவர்களால்
ஆங்கிலத்தில் ”GRATITUTE” என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டு இறுவட்டு
நாடகமாக வெளியிடப்பட்டது. (2004)
இவர் பாடசாலைகள், மன்றங்கள் போன்றவற்றிற்காக பல மேடை
நாடகங்களையும், பல நாட்டிய நாடகங்களையும் ”பா” நாடகங்களையும் எழுதியுள்ளார்.
இவர் எழுதிய பல நாடகங்கள் நூல்
உருப்பெறாமலும்,மேடைஏற்றப் படாமலும் உள்ளன.
“பா” நாடகங்களில் “நம்பி ஆரூரர்”
சிறப்பிடம் பெறத்தக்கது.
இவர் எழுதிய நாட்டிய நாடகங்கள் பல பரிசுகளை
வென்றுள்ளன.
*2007ல் வட மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் திணைக்களம்
மாகாண மட்டத்தில் நடாத்திய காவியக்கதா
நாட்டிய நாடகப் போட்டியில் ”பத்தினித் தெய்வம்” (சிலப்பதிகாரம்) எனும் ஒரு மணித்தியால நாட்டிய நாடகம் முதலாம் இடத்தைப் பெற்றது.
*2007 தமிழ்த் தினப்போட்டியில் “கங்குலும் பகல் பட வந்தான்” என்னும் நாட்டிய நாடகம் தேசிய மட்டத்தில் முதலிடம்
பெற்றது
*2008 தமிழ்த் தினப்போட்டியில் ”மீண்டும் சுயம்வரம்” (நளவெண்பா) என்னும் நாட்டிய நாடகம் தேசிய மட்டத்தில் முதல்
இடம் பெற்றது.
. *2009 தமிழ்த் தினப்போட்டியில் “பக்த பிரகலாதன்” எனும் நாட்டிய நாடகம் தேசிய மட்டத்தில்
இரண்டாம் பெற்றது.
* 2010 தமிழ்த் தினப்போட்டியில் “உயிர் நீப்பர் மானம் வரின்” எனும் நாட்டிய நாடகம் மாகாண மட்டத்தில்
இரண்டாம் இடம் பெற்றது.
இந்த
நாட்டிய நாடகங்கள் திருமதி சூரயயாழினி வீரசிங்கம் அவர்களால் நெறியாள்கை
செய்யப்பட்டது. (வவுனியா தமிழ் மத்திய
மகாவித்தியாலயம்).
*2011தமிழ்த் தினப்போட்டியில் “சூர சங்காரம்”
எனும் நாட்டிய நாடகம் மாகாண மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்றது . .
மற்றும் “நம்பி ஆரூரர் ” , ”பாஞ்சாலி சபதம்”,
”அகதிகள்” ,”வழி பிறக்கும்”, ”பெண்”, ”மானுடம் வாழ்க”, ”கற்பு இயல்”, ”பஞ்ச பூதங்களும் மனித வாழ்க்கையும்”, போன்ற நாட்டிய நாடகங்களையும் ” நம்பி ஆரூரர்,” ”சூலை செய்த வேலை,” ”பிட்டுக்கு மண் சுமந்த பெருமான்,” ”திருவாதவூரர்” போன்ற பா (கவிதை) நாடகங்களையும் எழுதியுள்ளார்.
மேலும்
* “முற்பகல் செய்யின்” என்னும் மேடை நாடகம் வவுனியா தமிழ் மத்திய மகா
வித்தியாலய மாணவர்களால் இவரது நெறியாள்கையில் மேடையேறப்பட்டது.(1992)
*“அன்றில் பறவைகள்” என்னும் நாடகம் திரு.சுவர்ணராஜா அவர்களின்
நெறியாள்கையில்,வ வுனியா இறம்பைக் குளம் மகளிர் மகா வித்தியாலய மாணவரால்
மேடையேறப்பட்டது. (1992).
*“கவரி வீசிய காவலன்” நுவரேலியா ஹோல் புறுக் தமிழ் மகா வித்தியாலய
மாணவரால் சு.முரளிதரன்,அகளங்கன் இருவரதும் நெறியாள்கையில் மேடையேறப்பட்டது(.1985)
*இவரது “அசோகவனம்” எனும் இலக்கிய நாடகம் 2009 தமிழ்த் தினப்போட்டியில் தேசிய மட்டத்தில்
இரண்டாம் இடத்தைப் பெற்றது. இவரது “சிலம்பின் பரல்கள்” எனும் இலக்கிய நாடகம் 2010 தமிழ்த் தினப்போட்டியில் தேசிய மட்டத்தில்
முதலாம் இடத்தைப் பெற்றது. இவ்விரு நாடகங்களும் ஸ்ரீகந்தவேள் ஆசிரியரால் நெறியாள்கை
செய்யப்பட்டது. வவுனியா (விபுலானந்தாக்
கல்லூரி.)
.
1) “அவர்கள் படித்தவர்கள்” எனும் இவரது நாடகம் இலங்கை
ஒலிபரப்புக் கூட்டுதாபனம்
தமிழ்ச் சேவை ஒன்றில் ஒலிபரப்பாகியது(20.06.1987).
2) “அம்மா
நான் வெளிநாடு போறேன்” எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்
தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில் ஒலிபரப்பாகியது(09.01.1990)
3) “ஆற்றில் விழுந்த மலர்” எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
தமிழ்ச் சேவை ஒன்றில் ஒலிபரப்பாகியது.(17.03.1990)
4) “இயந்திர இல்லறம்” எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில் ஒலிபரப்பாகியது(27.10.1990).
5) “அன்றில் பறவைகள்” எனும் இவரது நாடகம்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில்
ஒலிபரப்பாகியது(16.03.1991)
6) “உருகி எரியும் கர்ப்பூரங்கள்” எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்
தமிழ்ச் சேவை ஒன்றில் ஒலிபரப்பாகியது.(16.11.1991)
7) “செஞ்சோற்றுக் கடன்” எனும்
இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக் .கூட்டுத் தாபனம் தமிழ்ச் சேவை
ஒன்றில் ஒலிபரப்பாகியது.(11.12.1991)
8) “பப்புருவாகனன்” எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத் தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில் ஒலிபரப்பாகியது(24.03.1992).
9) “பாரி வள்ளல்” எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத் தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில் ஒலிபரப்பாகியது(27.10.1992).
10) “புத்திர
சோகம்” எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில்
ஒலிபரப்பாகியது(28.07.1992)
11) “மாற்றங்கள் மாற்றவில்லை” எனும்
இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில்
ஒலிபரப்பாகியது(04.12.1993).
12) “சிலம்பு பிறந்தது” எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத் தாபனம்
தமிழ்ச் சேவை ஒன்றில் ஒலிபரப்பாகியது.(12.07.1994)
13) “கங்கையின் மைந்தன்” எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில் ஒலிபரப்பாகியது(15.06.1996)
14) “கூவாத
குயில்கள்” எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில் ஒலிபரப்பாகியது.(04.08.1996)
15) “ஆனை கட்டிய அரியாத்தை” எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக்
கூட்டுத்தாபனம் தமிழ்ச் சேவை ஒன்றில் ஒலிபரப்பாகியது(16.05.1998)
16) “வாலி”
எனும் இவரது நாடகம் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ்ச் சேவை
ஒன்றில் ஒலிபரப்பாகியது(01.08.1998).
தமிழறிஞர் அகளங்கன் அவர்கள் பேச்சொன்றும் செயல்
ஒன்றுமாக நடந்து கொள்பவரல்லர் ..கவிஞர் செ.குணரத்தினம் அவர்கள் கூறுவது போல “மரமொடிந்து போனாலும் மனமொடிந்து போகும்” இயல்பினராக அவர் இருந்தாலும், சிறுமை கண்டு பொங்குகின்ற தன்மை
வாய்ந்தவராகவும், எதனையும் நேருக்குநேர் நின்று கூறும் இயல்புடையவராகவும், வாழ்ந்து தமிழ் சைவத் தொண்டை ஆற்றி வருகிறார்.
.
No comments:
Post a Comment