Sunday, April 15, 2012

கலாநிதி அகளங்கன் அவர்களின் நூல்களுக்கான பரிசுகள்



1)       வாலி என்ற ஆய்வுநூல் 1987ல் வெளிவந்த சிறந்த இலக்கிய நூலுக்கான பாராட்டை, அகில இலங்கை இலக்கியப் பேரவை, யாழ் இலக்கிய வட்டம் ஆகியவற்றிடம் பெற்றது.
2)       அன்றில் பறவைகள் என்ற வானொலி நாடகநூல் 1992 ல் வெளிவந்த சிறந்த நாடக நூலுக்கான தேசிய சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது.
3)       இலக்கிய நாடகங்கள் என்ற நாடக நூல் 1994 ல் வெளிவந்த  சிறந்த நாடக நூலுக்கான வடக்குக் கிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசையும், கொழும்புத் தமிழ்ச் சங்கப் பரிசையும் பெற்றது.
4)       அகளங்கன் கவிதைகள் என்ற கவிதை நூல் 1996 ல் வெளி வந்த சிறந்த கவிதை நூலுக்கான வடக்குக் கிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது.
5)       பத்தினித் தெய்வம் என்ற நாட்டிய நாடக நூல் 2008ல் வெளிவந்த சிறந்த நாடகத்துறை நூலுக்கான வடக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது.
6)       வேரும் விழுதும் என்ற நூல் 2008ல் வெளிவந்த  பல்துறையின் கலை இலக்கியப் பிரிவில் சிறந்த நூலுக்கான வடக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது.
7)       கங்கையின் மைந்தன் என்ற நாடக நூல் 2009 ல் வெளி வந்த சிறந்த நாடகத் துறை  நூலுக்கான வடக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசைப் பெற்றது.
8)       கங்கையின் மைந்தன் என்ற நாடக நூல் 08.10.2010 ல் தமிழ் நாடு கலை இலக்கியப்பெருமன்றமும் நியூசெஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து நடாத்திய இலக்கியப் போட்டியில் அறந்தை நாராயணன் நினைவுப் பரிசைப் பெற்றது. (இந்தியா திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நிகழ்வு இடம் பெற்றது.)
9)       2009ல் வெளிவந்த சிறந்த நாடக நூலுக்கான தேசிய சாகித்திய மண்டல சிறப்புச் சான்றிதழை இவரது கங்கையின் மைந்தன் நாடக நூல் பெற்றுக்கொண்டது(30.10.2010)
10)    எழுத்தாளர் ஊக்குவிப்பு மையம் சிறந்தநாடக  நூலுக்கான தமிழியல் விருதினை இவரது கங்கையின் மைந்தன் எனும் நாடக நூலுக்கு வழங்கியது.(2010)  
11)    யாழ் இலக்கிய வட்டமும் அகில இலங்கை இலக்கியப் பேரவையும் இணைந்து2009 ல் வெளிவந்த சிறந்த நாடக நூலுக்கான பரிசை இவரது கங்கையின் மைந்தன் நாடக நூலுக்கு வழங்கியது.(12.06.2011)

No comments:

Post a Comment