Sunday, April 15, 2012

கலாநிதி அகளங்கன் அவர்களது கவிதைகள்


செல்” “வா” என்று ஆணையிடாய்,  சேரர் வழியில் வீரர் காவியம்,  சமவெளி மலைகள்,  தென்றலும் தெம்மாங்கும்,  அகளங்கன் கவிதைகள் இசைப்பாமாலை,  சுட்டிக்குருவிகள்,  சின்னச்சிட்டுக்கள்,  சிரிக்க விடுங்கள்,  பந்து அடிப்போம் ஆகிய கவிதை நூல்களை வெளியிட்டுள்ளார்.
வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பல கவியரங்குகளில் பங்கேற்றுள்ளார்.  பல மேடைகளில் கவியரங்க நிகழ்வில் தலைமை வகித்தும் கவிதை படித்தும் உள்ளார்.
பத்திரிகை ,சஞ்சிகை விழா மலர்கள் போன்றவற்றில் பல கவிதைகள் எழுதியுள்ளார் .மேலும் இசைப்பாடல்கள் பலவற்றையும் எழுதியுள்ளார்.

இலங்கைப் பல்கலைக் கழக யாழ் வளாக தமிழ் மன்றக் கீதம், வவுனியா தேசிய கல்வியியற் கல்லூரிக் கீதம், வவுனியா நகரசபைக் கீதம், வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபைக் கீதம் வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர் சங்கக் கீதம், வவுனியா இந்து மாமன்றக் கீதம், வவுனியா பெண்கள் அபிவிருத்தி மையக்கீதம்,  வவுனியா விபுலம் அரங்கியற் கலைக் கழகக் கீதம்,   வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரிக் கீதம், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலய வணிக மன்றக் கீதம்  மற்றும் வவுனியா பம்பைமடு பாடசாலைக் கீதம்,வவுனியா ஒலுமடு பாடசாலைக் கீதம்,வவுனியா சுந்தர புரம் சரஸ்வதி வித்தியாலயக் கீதம்,செட்டிகுளம் கணேசபுரம் சண்முகானந்தா வித்தியாலய கீதம்,வவுனியா கணேச புரம் விநாயக வித்தியாலய கீதம் போன்ற  பல பாடசாலைகளின் கீதங்களையும் இவர் இயற்றியுள்ளார்.  அவை எல்லாம் பாடப்பட்டு வருகின்றன.  இவரது இசைத்திட முடியாது எங்கள் பெருமை எனத் தொடங்கும் தமிழ் வாழ்த்துக் கீதம் மிகவும் சிறப்பானது.   இவரது வித்தியா விநாயகர் துதிப்பாடல் திங்கட்கிழமை தோறும் காலைப் பிரார்த்தனையின் போது வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் பாடப்பட்டு வருகின்றது .
பல நாட்டிய நாடகங்களையும்,  கும்மி,  கரகாட்டம்,  கோலாட்டம் வரவேற்பு நடனம் முதலான கலைவடிவங்களுக்கான பல பாடல்களையும் பல மெல்லிசைப் பாடல்களையும் இவர் எழுதியுள்ளார்.மேலும் பல பக்திப் பாடல்களையும் எழுதியுள்ளார்.  கும்பாபிசேக மலர்களில் வெளிவந்தன.  பல மாநாட்டு மலர்களிலும் சஞ்சிகைகளிலும் பல பாடல்களையும்,  கவிதைகளையும் எழுதியுள்ளார்.                                         

No comments:

Post a Comment