அன்பினாலே குடும்பம் நடத்தும்
அன்றில்ப் பறவைகள்
அம்மா அப்பா
அன்றில்ப் பறவைகள்
அந்தக் கூட்டுக்
குஞ்சுகள் நாங்கள்
தென்றல்ப் பறவைகள் -பொதிகைத்
தென்றல்ப் பறவைகள்.
உண்ணும் உணவை
நான்கு பேரும்
பகிர்ந்து உண்ணுவோம்
உடுக்கும் உடையைக்
கூட நாங்கள்
மாற்றி உடுப்போம்.
இன்பம் என்ற
போதில் நாங்கள்
மகிழ்ந்து துள்ளுவோம்.
துன்பம் வந்த
போதும் ஒன்றாய்ச்
சேர்ந்து கொள்ளுவோம்.
ஒற்றுமையே எங்கள் உயிர்க்(கு)
உறுதுணை மூச்சு.
ஒழுங்கு மானம்
உடலில் ஓடும்
உதிரமும் ஆச்சு.
பாரில் இந்தக் குடும்பம்போல
வேறு இல்லையே -என்று
பலரும் போற்ற வாழ்வோம், வாழ்வோம்
பன்னெடுங் காலம்
No comments:
Post a Comment